fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விருது விழாக்களில் ஒதுக்கப்பட்ட ராட்சசன் – கடுப்பில் விஷ்ணு பதிவிட்ட ஸ்டேட்டஸ் !  குவியுது ஆதரவும், பாராட்டும்

ratsasan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விருது விழாக்களில் ஒதுக்கப்பட்ட ராட்சசன் – கடுப்பில் விஷ்ணு பதிவிட்ட ஸ்டேட்டஸ் !  குவியுது ஆதரவும், பாராட்டும்

முதலில் தேசிய விருது, அடுத்ததாக SIIMA விருதுகள் என சினிமா வட்டாரம் ஒரே திருவிழாக்கோலமாக தான் உள்ளது.

தேசிய விருது வழங்கிய சமயத்திலேயே நம் தமிழ் சினிமா ஒதுக்கப்பட்டதாக பலரும் கூறினர். ராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம், விஷாலின் இரும்பு திரை, விஜய் சேதுபதியின் சீதக்காதி, ராம்குமாரின் ராட்சசன், பிரேம்குமாரின் 96, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா என்று அடுக்கிக்கொண்டே செல்லும் சூழல் தான்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் சற்றே கடுப்பாகி மன வருத்தத்துடன் தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டினார்.

“மீண்டும் ஒரு விருது வழங்கும் விழாவில் ராட்சசன் எந்த ஒரு பிரிவிலும் பரிந்துரை கூட செய்யப்படவில்லை. மக்களின் ஆதரவே ஒரிஜினல் விருது. எண்கள் படத்தின் மீது நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி. ராம்குமாரின் திரைக்கதை, ஜிப்ரான் அவர்களின் பின்னணி இசை, சான் லோகேஷின் எடிட்டிங் நினைத்து நான் பெருமை படுகிறேன்.”

சிறுது நேரம் கழித்து, “என் டீவீட்டை படித்துவிட்டு, என் மகன் கோபமாகி விட்டான், ஹல்க் ஆக மாற நினைக்கிறான். அவன் கோபமான முகம் மற்றும் கைகளை பாருங்கள்.” என சர்ச்சைகளை ஒதுக்க கூல் ட்வீட் ஒன்றையும் தட்டினார்.

எனினும் சினிமா பிரபலங்கள் இயக்குனர் சாம் ஆண்டன், நடிகர்கள் சாந்தனு, கிருஷ்ணா மற்றும் பலர் விஷ்ணுவிற்கு ஆறுதலாக ஸ்டேட்டஸ் பதில் தட்டினர்.

 

தனக்கு விருது என்று கூட அவர் வருத்தப்படவில்லை, தனது டெக்கனிகள் டீமுக்கு கிடைக்கவில்லையே என்பதே அவரின் வருத்தும் என்பதை பார்க்கும் பொழுது, ஒரு படைப்பாளியாக அவரின் தற்போதைய மனநிலையை புரிந்துகொள்ள இயலுகிறது.

உண்மை ஜெயிக்கும் விஷ்ணு, காத்திருப்போம் …

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top