Tamil Cinema News | சினிமா செய்திகள்
விரக்தியில் இருந்த எனக்கு, இந்த சூர்யா படம் தான் இன்ஸபிரேஷன்- மனம் திறந்த விஷ்ணு விஷால்
நம் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராக இருப்பவர் விஷ்ணு விஷால். அதற்கு சான்றாக ஜீவா, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என அடுக்கிக்கொண்டே போகலாம். தற்பொழுது தன் கைவசம் 6 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இரண்டு படங்களை அவரே தயாரிக்கிறார். தன் விவாகரத்துக்கு பின் ஜூவாலா கட்டாவுடன் நட்பு, சூப்பர் பிட் ஆசாமியாகவும் வளம் வருகிறார்.
இந்நிலையில் தான் எவ்வாறு மாறியதற்கு தன் மனவலிமை தான் ஒரே காரணம் என்பதனை லெட்டர் வடிவில் தெரிவித்துள்ளார். அதன் சாரம்சம் பின்வருமாறு …

VV
மனைவியுடன் விவாகரத்து. குழந்தையைப் பிரிந்து வாழ்தல், ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து, ஆறு மாதம் படப்பிடிப்பு இல்லை, குடிப்பழக்கம், தூக்கமின்மை, மனஅழுத்தம், அப்பாவின் ஒய்வு என பலவற்றை பற்றி பேசியுள்ளார்.

VV
மேலும் பின்னர் இதில் இருந்து வெளியேற நல்ல உணவு பழக்கம், தங்கென்ன தனி பிட்னஸ் ட்ரைனர், சில மனிதர்களிடம் இருந்து ஒதுங்குவது என வாழக்கை முறையை மற்றயுள்ளார். பின்னர் தான் இது போல மாறியதாக சொல்லியுள்ளார்.

VV
யாரும் மனம் தளரக்கூடடாது, என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தான் இதை கூறுவதாகவும் சொல்லியுள்ளார். சூர்யா – பட வழியை நான் பின் பற்றி இப்படி ஆனேன் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
https://twitter.com/TheVishnuVishal/status/1217846402534887424
இயக்குனரும் தன் நன்றியை பகிர்ந்துள்ளார்.
