அட ஆமாங்க நம்ம விஷ்ணு விஷால் தான்   கெளதம் மேனன் தயாரிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் இருந்து விளக்கியுள்ளார்.

vijay-sethupathi-act-in-vishnu-vishal-kadhanayagan_secvpf
kadhanayagan

விஷ்ணு விஷால் தன் கைவசம்  4 படங்கள் வைத்துள்ளார். ‘ராட்சசன்’,  ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’,   ‘பொன் ஒன்று கண்டேன்’  மற்றும் எழில் இயக்கும் படம்.

இதில் ‘பொன் ஒன்று கண்டேன்’, சென்ற  வருடம் தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ்  விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ என்ற சூப்பர் ஹிட்  படத்தின் ரீமேக். இப்படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கவுள்ளார். ஹீரோயினாக தமன்னா நடிக்கவுள்ளார். தர்புகா சிவா இசை. ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.

POK

இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் துவங்க தாமதமாவதால், கால்ஷீட் தேதிகள்  அட்ஜஸ்ட் செய்ய  முடியாமல்  விலகியுள்ளதாக  விஷ்ணு தனது டிவிட்டர் பக்கத்தில்  உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் இயக்குனர் எழிலின் படத்தின் ஷூட்டிங் துவங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

VV

விஷ்ணு – எழில் காம்போவில் ரிலீஸான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’  படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ளனர் இவர்கள். கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.  காமெடியில் கலக்க யோகி பாபு . டி.இமான் இசை.  இப்படத்தினை ‘இஷான் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் துஷ்யந்த் தயாரிக்கவுள்ளார்.   இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன். ராம்குமார் அவர்களின் மகன். முன்பே சக்ஸஸ், மச்சி போன்ற படங்களில் நடித்தவர். இந்த நிறுவனம் சார்பில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகிறது இப்படம். வெகு விரைவில் படத்தின்  டைட்டில், மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .