Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் இணையும் ராட்சசன் ஜோடி.! பிரம்மாண்ட வெற்றி படத்தின் ரீமேக்
Published on
ராட்சசன் படத்தின் மூலம் உலக அளவில் வெற்றி பெற்ற விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் கெமிஸ்ட்ரி மீண்டும் அடுத்த படத்தில் இணையவுள்ளனர்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் ‘ஜெர்ஸி’ இந்த படத்தின் ரீமேக்கில் இவர்கள் நடிக்க உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டை சம்பந்தப்பட்ட இந்த படம் நானி மற்றும் சாரதா ஸ்ரீநாத் நடித்து இருந்தனர்.
தற்போது நானி கேரக்டரில் விஷ்ணு விஷாலும் சாரதா ஸ்ரீநாத் கேரக்டரில் அமலா பாலும் நடிக்க உள்ளனர். எஸ்.ஜே.சூர்யா நடித்து ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கிய வெங்கடேசன் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
தற்போது நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
