Videos | வீடியோக்கள்
ராட்சசனை மிஞ்சும் மோகன்தாஸ்.. பதற்றத்தை பற்றவைத்த டைட்டில் டீசர்
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் சில நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் விஷ்ணு விஷால். சில கமர்சியல் படங்களில் தோல்வியடைந்திருந்தாலும் ராட்சசன், வெண்ணிலா கபடி குழு போன்ற திரைப்படங்களை சினிமா ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.
அந்த வகையில் விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் டீஸர் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இந்த டீசரை பார்க்கையில் தொடர் கொலைகாரன் போல் காட்சியளிக்கும் விஷ்ணு விஷாலின் ரத்தக்களறி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.
