Connect with us
Cinemapettai

Cinemapettai

actor-gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டாம் திருமணத்திற்கு அடி போட்ட பிரபல நடிகர்.. முதல் மனைவிக்குத் தெரியாமல் நடு ராத்திரியில் நிச்சயதார்த்தம்

அண்மைக்காலத்தில் வேகமாக வளர்ந்து வந்த நடிகர் விஷ்ணு விஷால் திடீரென குடிபோதை, விவாகரத்து, காதல் சர்ச்சை என ஆளே மாறி ஒரு மாதிரியாகி போனார். இந்நிலையில் அதில் இருந்து மீண்டு வந்த அவர் தற்போது பழைய படி சினிமாவில் நடித்து வருகிறார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஷ்ணு விஷால். அவரது நடிப்பில் வெளியான, ராட்சசன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் உச்ச நட்சத்திரமாக உயருவார் என்று பார்த்தால் திடீரென ஆளை காணாம்.

கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்தார். ஒரு மகன் உள்ள நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சட்டப்படி விவாகரத்து செய்தார்.

சினிமாவைப் பொறுத்தவரை காதல் கல்யாணம் விவாகரத்து என்பதெல்லாம் ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. அதேபோல் சினிமாக்காரர்களும் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. ஒரு காலத்தில் ஒரு நடிகர் இரண்டு மூன்று மனைவிகள் வைத்திருந்தது கூட அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது குடும்பத்தினருக்கும் கோர்ட்டுக்கும் பயப்படுகிறார்களோ, இல்லையோ, இரண்டு திருமணங்கள் மற்றும் விவாகரத்து செய்வதற்கு நெட்டிசன்களைப் பார்த்து பயந்து ஓடுகிறார்கள் சினிமாக்காரர்கள். ஆம். ஒரு சின்ன விஷயம் கிடைத்தாலும் அதை வைத்து ஊதி பெரிதாக்கி விடுவார்கள்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் அவர் போடும் புகைப்படங்களில் வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. விவாகரத்து செய்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது ஒன்றும் தவறான விஷயம் அல்ல.

இவர்கள் காதலை, காதலர் தினத்தன்று விஷ்ணு விஷால் உறுதி செய்துவிட்டார். தற்போது ஜூவாலா பிறந்தநாளுக்கு நடுராத்திரியில் மோதிரம் ஒன்று பரிசளித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருந்த பதிவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கம் ஆரம்பித்து விட்டதாகவும், எங்களுக்கும் அரியானுக்கும், எங்கள் குடும்பங்களுக்கும், நண்பர்களுக்கும் சுற்றியுள்ள மக்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி செயல்படுவோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

vishnu-vishal-cinemapettai

vishnu-vishal-cinemapettai

இந்த பதிவில் தனது மகன் மீது விஷ்ணு விஷால் வைத்துள்ள அன்பு வெளிப்படையாக தெரிகிறது. அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது மோதிரம் மாற்றிக் கொண்டால் திருமணம் முடிந்து விட்டது என்று தான் அர்த்தம் அதைப்போல் தற்போது லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்த விஷ்ணு விஷால் திருமணமாகிவிட்டது என்று ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

v

vishnu-vishal-cinemapettai-1

Continue Reading
To Top