ரிலீசுக்கு முன்னரே ராட்சசனை மிஞ்சிய எஃப் ஐ ஆர்.. அட நம்ம தனுஷும் கன்ஃபார்ம் பண்ணிட்டாரு

தமிழில் எப்போதாவது ஒரு படம் நம்மை மிரட்டும் லெவலுக்கு வருவதுண்டு. அப்படி 2018 ஆம் ஆண்டு வெளியான படம்தான் ராட்சசன். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இராம்குமார் எழுதி, இயக்கி ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். இதில் பணியாற்றிய அனைவருமே தங்களின் வேலையை மிக சிறப்பாக, செய்து இருப்பார்கள்.

அந்த படத்தின் தீம் இசையை கேட்டாலே, பயம் வரக்கூடிய அளவுக்கு அந்த படத்தின் இசையை அருமையாக அமைத்து இருப்பார் இசையமைப்பாளர் ஜிப்ரான். நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஒரு திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது ராட்சசனாகத்தான் இருக்கும் .வசூலிலும் எதிர்பாராத வெற்றியை பெற்ற படமாகவும் அமைந்தது. அதன் பின் ஹாலிவுட் ரீமேக் போன்ற பல உயரங்களை எட்டியது. இந்த படத்தை பல தயாரிப்பாளர்களும், நடிகர்களும் நிராகரித்தும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து, விஷ்ணு விஷாலுக்கு அடுத்தடுத்து பல படங்கள் வெளிவந்தாலும் ராட்சசன் படம் கொடுத்த அந்த ஒரு இமேஜை வேறு எந்த படமும் கொடுக்கவில்லை. தற்போது அந்த இடத்தை நிரப்ப, அவரின் எப்ஐஆர் திரைப்படம் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது,

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்திருக்கும் எப்ஐஆர் திரைப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழில் வெளியாகும் அதேநாளில் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவிலும் படம் வெளியாகிறது. தெலுங்கிலும் ராட்சசன் படம் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்றதால், அங்கேயும் இவருக்கான மார்க்கெட் ஒப்பன் ஆகி உள்ளது. ஆக, இந்த படம் வெளியாவதற்கு முன்பே ராட்சசன் படம் செய்த மொத்த வசூலையும் தூக்கி சாப்பிட்டு உள்ளது.

இதுகுறித்து விஷ்ணு விஷால் கூறும் போது , ராட்சசன் படம் எனக்கு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி தந்தது போல் எஃப்ஐஆர் படமும் , மேலும் ஒரு திருப்பமாக அமைந்துள்ளது. படம் பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. மேலும், படத்துக்கு மிகப்பெரிய சிறப்பு சேர்ப்பது போல் ரெட் ஜெயன்ட் மூவீஸ், இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறது என்று கூறி இருக்கிறார்.

இதுமட்டுமின்றி, மற்றுமொரு சிறப்பாக இந்த படத்தின் தீம் பாடலை விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பரான நடிகர் சிம்பு பாடி இருக்கிறார். பாடல்கள், டீஸர், ட்ரைலர் என அனைத்துமே இந்த படத்தில் மிரட்டி இருக்கிறது. இந்த படத்தை இதுவரை பார்த்த அனைத்து பிரபலங்களும், படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறி இருக்கின்றனர்.

தனுஷூம் இந்த படத்தை பார்த்துவிட்டு ராட்சசன் படத்தை விட மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள் என்று பாராட்டித் தள்ளி உள்ளாராம். விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் இந்த படம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதே போல் ராட்சசன் தமிழகத்தில் செய்த வசூல் வேட்டை 18 கோடி, இந்த வசூலை எஃப்ஐஆர் திரைப்படம் ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளில் வெளியாவதால் வியாபாரத்தில் ராட்சசனை கடந்து விட்டதாம். அதாவது ரிலீஸுக்கு முன்னரே ராட்சசன் படத்தின் மொத்த வசூலை தாண்டி விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஷ்ணு விஷாலின் காட்டில் அடைமழை தான், தற்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துக் கொண்டே போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்