வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்-

காவல் துறையை லட்சியமாகக் கொண்ட நிக்கி கல்ரானி, காதலிக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் பணத்தை தொலைத்துவிட்டு அல்லாடும் விஷ்ணு விஷால். எம்.எல்.ஏ. நடத்தும் இலவசத் திருமண நிகழ்ச்சியில் ஒரு ஜோடி குறைந்ததால் வலுக்கட்டாயமாக புஷ்பா என்பவருக்கு நாடக கல்யாணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளும் சூரிக்கு ஏற்படும் அவஸ்தைகள். இது தான் இப்படத்தின் கதை.

லாஜிக் பெருசா இல்லமால், வெறும் காமெடியயை நம்பி எழில் எடுத்த படம். படத்தின் காமெடி நல்ல ரீச் ஆனது.

எழில் விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் இணையுள்ளது என்று அப்படத்தின் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிப்பார் என்றும் கிசு கிசுக்கப்பட்டு வந்த நிலையில். இன்று அந்த தகவல் உறுதி ஆகியுள்ளது.

இந்த படத்தை ‘ஈஷான் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் துஷ்யந்த் ராம்குமார் தயாரிக்கிறார். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன். ராம்குமார் அவர்களின் மகன். முன்பே சக்ஸஸ், மச்சி போன்ற படங்களில் நடித்தவர். இந்த நிறுவனம் சார்பில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகிறது இப்படம். இப்படத்தின் பூஜை இன்று காலை நடந்தது. டி.இமான் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ்.

அதிகம் படித்தவை:  வானில் சுற்றி வந்த மர்மப்பொருளால் நெல்லை மக்கள் அச்சம்

படத்தில் காமெடியன் யோகி பாபுவுடன் கூட்டணி என்றும் தன் ட்விட்டரில் சொல்லியுள்ளார் விஷ்ணு விஷால். அப்படியென்றால் நம் ‘பரோட்டா சூரி’ இல்லையோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிகம் படித்தவை:  திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்து வெற்றி பெற்ற முன்னணி நடிகை... திரைத்துறையில் ஒரு சுவாரசியம்

விரைவில் படத்தின் பெயர் அறிவிப்பு வந்துவிடும். அப்பொழுது தெரியும் மொட்டை ராஜேந்திரன், ரோபோ ஷங்கர், சூரி போன்றோர் இருப்பார்களா இல்லையா என்று .