Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷ்ணு விஷால் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ச்சியில் கோலிவுட்!
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நடிகராக அறிமுகமானார் விஷ்ணு விஷால் ஆவார். இவர் சமீபத்தில் நடித்த ராட்சசன் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இப்படி இருக்கும் நிலையில் இவரது திருமண வாழ்க்கை தற்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

vishnu-vishal-divorce
2011 டிசம்பரில் நடிகர் கே.நடராஜன் மகளான ரஜினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மனைவியான ரஜினியை விவாகரத்து செய்துவிட்டதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) November 13, 2018
இவர்கள் இருவரும் சில நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. நாங்கள் இருவரும் நல்ல கணவன் மனைவியாகவும், நல்ல நண்பராகவும் சில காலங்களில் வாழ்ந்து வந்துள்ளோம். நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் நல்ல மரியாதையுடன் நடந்து கொள்வோம் என கூறியுள்ளார் இதை பற்றிய தகவல்கள் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
