fbpx
Connect with us

கவுதம் மேனன் படத்தில் விஷ்ணு விஷால், தமன்னா

Gautham Menon-VishnuVishal-Tamanna

கவுதம் மேனன் படத்தில் விஷ்ணு விஷால், தமன்னா

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `மாவீரன் கிட்டு’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, முருகானந்தம் இயக்கத்தில் `கதாநாயகன்’ என்ற படத்திலும், பெயரிடப்படாத மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்த பின்னர், `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் `முண்டாசுப்பட்டி’ படத்தில் இணைந்த அதே கூட்டணி இப்படத்திலும் இணைய உள்ளது. இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவும் விஷ்ணு ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார். கவுதம் மேனின் உதவி இயக்குநர் செந்தில் வீராசாமி இயக்க உள்ள இப்படத்தை, கவுதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒண்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மூலம் தயாரிக்கிறார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top