fbpx
Connect with us

Cinemapettai

புது காதலியுடன் விஷ்ணு விஷால் அது பழசு.. ஜுவாலா கூட இப்ப நெருக்கமா இருக்கிறது யாரு? சர்ச்சையான புகைப்படம்

vishnu-jwala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புது காதலியுடன் விஷ்ணு விஷால் அது பழசு.. ஜுவாலா கூட இப்ப நெருக்கமா இருக்கிறது யாரு? சர்ச்சையான புகைப்படம்

விஷ்ணு விஷால் தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு தற்போது பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா ஆகிய இருவரும் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு உறுதி செய்தனர்.

விஷ்ணு விஷால் தற்போது எஃப்ஐஆர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பண உதவி செய்வது ஜுவாலா கட்டா என செய்திகள் பரவி வருகின்றன. மேலும் சில வருடங்களாகவே விஷ்ணு விஷாலுக்கு பணத்தேவை இருக்கும்போது தொடர்ந்து உதவி வருபவராக ஜுவாலா கட்டா இருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா உடன் நெருங்கிய புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருந்த நிலையில் ஜுவாலா குட்டா அரைகுறை ஆடையில் ஒரு ஆண் நண்பருடன் வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதனை விஷ்ணு விஷாலும் லைக் செய்திருப்பதால் இருவருக்கும் தெரிந்த நண்பராக இருக்கலாம் என தெரிகிறது.

jwala-gutta

jwala-gutta

தற்போது விஷ்ணு விஷால் பிரபுசாலமன் இயக்கத்தில் காடன் எனும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top