vishnu-vishal-amala-paul-marriage-1
vishnu-vishal-amala-paul-marriage-1

விஷ்ணு விஷால், அமலா பால் திருமணம் என்பது பொய் (Vishnu Vishal, Amala Paul Marriage is not True)

சினிமாவில் நடக்கும் திருமணத்தை விட சினிமா நடிகர்களின் திருமண வாழ்க்கை செம திரில்லாக செல்கிறது. யார் யார் கூட வாழ்வார்கள் என்பதும் தெரியவில்லை, என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை. அதனால்தான் சினிமாக்காரர்களுக்கு பொண்ணு கொடுக்கவே இந்த சமுதாயம் சற்று யோசிக்கும். ஆனால் விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலாபால் சிறிது நாட்களிலேயே விவாகரத்து பெற்றார் அதன்பின்பு அவருடைய அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பித்தது போஸ்டர்கள் வீடியோக்கள் என சற்று அதிகமான கவர்ச்சிகளோடு சோசியல் மீடியாக்களில் விட்டார் பின்பு திருட்டுப்பயலே இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்தார். தற்பொழுது அவரது கைகளில் சில பல படங்களில் இருக்கின்றன.

அதிகம் படித்தவை:  குட்டி குட்டி உடை, பார்ட்டி: அமலாபாலை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

கொஞ்ச நாளைக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷால் அவரது மனைவியை விவாகரத்து செய்தார். அவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. ஏன் இந்த திடீர் விவாகரத்து எதனால் பிரச்சினை வந்தது என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் அமலாபால் ஆக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது.

vishnu-vishal-amala-paul-marriage
vishnu-vishal-amala-paul

சமீபத்தில் வெளிவந்து ராட்சஸன் படத்தில் விஷ்ணு விஷால் அமலாபால் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் நட்பாக பழகி வந்த இருவரும் இப்பொழுது திருமணம் செய்ய இருக்கின்றனர் என்று சுற்றுவட்டாரம் பேசியது. அதனால்தான் விஷ்ணு விஷால் சீக்கிரமாக விவாகரத்து வாங்கினார் என்றும் சொன்னார்கள்.

அதுவும் விஷ்ணுவிஷால் கல்லூரியில் படித்த பொழுது அவர் மனைவியை காதலித்து திருமணம் செய்தார். இப்பொழுது அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் விவாகரத்து வாங்கியதை குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அமலாபால் விவாகரத்து எல்லாம் வாங்கி ரெடியாக இருந்தார். இப்பொழுது விஷ்ணு விஷால் அமலாபாலின் வாழ்க்கையின் உள்ளே நுழைகிறார் என செய்தி பரவியது. இருவரும் இணைந்து ஒரு வாழ்க்கையை தொடங்கினாலும் தவறில்லை. இனிமேலும் பிரியாமல் இருந்தால் சரி. ஆனால் உண்மை இல்லையே. இது இல்லவே இல்லை என விஷ்ணு விஷால் மறுத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  அமலா பால் அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் உள்ளாரா? விஜய் பதில்

நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இப்படிலாம் எழுதாதிங்கனு வேதனையில் சொல்லிவிட்டு போய்ட்டார்.