Connect with us
Cinemapettai

Cinemapettai

FIR படத்தை 30 கோடி கொடுத்தும் தர மறுத்த விஷ்ணு விஷால்.. அதிர்ச்சியில் கோலிவுட்

vishnu-vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

FIR படத்தை 30 கோடி கொடுத்தும் தர மறுத்த விஷ்ணு விஷால்.. அதிர்ச்சியில் கோலிவுட்

வெண்ணிலா கபடிகுழு, குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் விஷ்ணு விஷால். தற்போது விஷ்ணு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த ராட்சசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான காடன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் திரைப்படம் எஃப் ஐ ஆர். இப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், கௌதம் மேனன், மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

எஃப் ஐ ஆர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, டப்பிங், எடிட்டிங் போன்ற இறுதிகட்டப் பணிகளும் முழுமையாக முடிவடைந்துள்ளது. அண்மையில் இப்படம் ஓ டி டி இல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு விஷ்ணு விஷால் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எஃப் ஐ ஆர் படத்தை திரையரங்குகளில் வெளியிட தான் விரும்புவதாகவும், அதற்காக முடிந்தவரை முயற்சி செய்வதாகவும் சொல்லியிருந்தார்.

மிகச்சிறந்த திரையரங்க அனுபவத்திற்காக எஃப் ஐ ஆர் படத்தை உருவாக்கியுள்ளோம் என்றார். எஃப் ஐ ஆர் படத்தின் போஸ்டர், டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் எஃப் ஐ ஆர் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட 30 கோடி கேட்டுள்ளனர். அதற்கு விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்து எஃப் ஐ ஆர் படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளார். எஃப் ஐ ஆர் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமை மட்டும் 8 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top