Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் மிரட்ட வரும் ராட்சசன் 2.. இந்த பிரபல நடிகர்தான் சைக்கோ வில்லனாம்.. இப்பவே பயமாருக்கே
நடிகர் விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் ராட்சசன், முண்டாசுப்பட்டி போட்ட இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களிடம் விஷ்ணுவை கொண்டு சேர்த்த பெருமை இயக்குனர் ராம்குமாருக்கு உண்டு.
முதலுக்கு மோசமில்லாத அளவுக்கு படங்கள் பண்ணியிருந்தாலும் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் விஷ்ணு விஷாலுக்கு பெரிய பிரேக் கொடுத்த திரைப்படங்கள் முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் தான்.
தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் ஹாட்ரிக் வெற்றிக்காக இணையபோவதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுத்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் ட்விட்டரில் இரண்டு படங்களின் வெற்றியை பற்றியும் ஒரு மீம் கிரியேட் செய்து விஷ்ணு விஷாலுக்கு டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார்.
அதை விஷ்ணு விஷால், ராம்குமார் இடம் மீண்டும் மூன்றாவது முறை இணையலாமா? என்பதைப் போல பதிவிட்டு இருந்தார். இதனால் மீண்டும் இந்த கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த ராட்சசன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க வைக்க டேனியல் பாலாஜி மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரிடமும் பேசி வருவதாக சொல்கிறார்கள்.

vishnu-vishal-tweet
ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க இருந்த நிலையில் திடீரென ராம்குமாரை நீக்கிவிட்டனர் என்ற செய்தியும் கிடைத்துள்ளது. விஷ்ணு விஷால் கைவசம் மோகன்தாஸ், FIR, காடன், ஜெகஜால கில்லாடி போன்ற படங்கள் வைத்துள்ளார்.
