Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிக்ஸ் பேக்.. வெறித்தனமாக களத்தில் நிற்கும் விஷ்ணு விஷால்.. வைரல் புகைப்படம்
ராட்சசன் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற விஷ்ணு விஷாலின் அடுத்த படம் வெறித்தனமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஷ்ணு விஷால் சிக்ஸ்பேக் வைத்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் FIR படத்தின் பஸ்ட் லூக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் கதைக்களம் போலீசார் மற்றும் கைதிகளுக்கு இடையே நடப்பது போன்று இருக்கிறது.
சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் படத்திற்காக உடலை வருத்திக்கொண்டு அந்த கேரக்டராகவே மாறி விடுவார்கள். அதேபோல் விஷ்ணுவிஷால் தனது உடலை சிக்ஸ்பேக் மூலம் மெருகேற்றிக் கொண்டு தயாராகி வருகிறார்.
இந்த படமும் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றி கொடுக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

v-vishal
