சூப்பர் ஹிட் கொடுத்தும் கெரகம் யாரை விட்டுச்சு.. விஷ்ணு விஷாலுக்கு ஆரம்பித்த ஏழரை

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் அதைத் தொடர்ந்து நிறைய படங்கள் விளையாட்டை மையமாக வைத்தே அமைந்தன. இவர் நடிப்பில் ஜீவா படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் இவர் வளர்ந்து வரும் ஹீரோவாகவும் முன்னேறி வந்தார்.

அதன் பிறகு விஷ்ணு விஷாலுக்கு மார்க்கெட் அப்படியே கொஞ்சம் சரியத் தொடங்கியது. மனைவியுடன் விவாகரத்து, நடிகர் சூரியுடனான பிரச்சனை என்று சினிமாவில் மொத்த பெயரும் கெட்டுப் போனது. இதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைப்பது அப்படியே குறைந்துவிட்டது. இதனால் சில காலம் விஷ்ணு விஷால் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார்.

Also Read:2ம் மனைவியின் கண்ட்ரோலில் இருக்கும் விஷ்ணு விஷால்.. ட்வீட் போட்டு அம்பலப்படுத்திய விஜய் ஆண்டனி

கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அமைந்து வருகின்றன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் உடன் இணைந்து விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் இந்த படமும் விளையாட்டை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் விஷ்ணு விஷால் அறிமுக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரே தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மோகன்தாஸ் திரைப்படம் திகில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

Also Read:விஜய் சேதுபதியை ஓரங்ட்டி ஜெயித்த விஷ்ணு விஷால்.. குஸ்தி முதல் நாள் வசூலை பார்த்து வாயைப் பிளந்த டிஎஸ்பி

ஆனால் இந்த படம் தியேட்டர் ரிலீஸ் ஆக வராமல் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு வளர்ந்த மிகப்பெரிய தொழிலில் இந்த ஓடிடி தளங்களும் அடங்கும்.நெட்ப்ளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் என முன்னணி தளங்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பொழுது முதல் முறையாக ஜியோ சினிமா இந்த பிசினஸில் காலடி பதிக்க இருக்கிறது.

ஐபிஎல் போட்டிகள் முடிவடைய இருக்கும் நிலையில் காலடி பதிக்கும் ஜியோ சினிமா முதன் முதலில் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறது. நல்ல வளர்ந்து வரும் நேரத்தில் விஷ்ணு விஷால் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது அவரை கொஞ்சம் பின்னுக்கு தான் தள்ளி இருக்கிறது. இருந்தாலும் தயாரிப்பாளர் இவர் என்பதால் போட்ட பணத்தை விட அதிகம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் கூட இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கலாம்.

Also Read:விஜய் சேதுபதியை ஓரங்ட்டி ஜெயித்த விஷ்ணு விஷால்.. குஸ்தி முதல் நாள் வசூலை பார்த்து வாயைப் பிளந்த டிஎஸ்பி

Advertisement Amazon Prime Banner