வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

குடும்ப சண்டையை கன்டென்ட்டாக மாற்றிய விஷ்ணு-சம்யுக்தா.. பதிலடி கொடுத்த மாமாக்குட்டி

சின்னத்திரை ஜோடிகளான விஷ்ணு, சம்யுக்தா குடும்ப பிரச்சனை தான் இப்போது சோஷியல் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது. திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ள இந்த ஜோடி தற்போது நீயா நானா என போட்டி போட்டுக் கொண்டு குடும்ப மானத்தை தெருவுக்கு இழுத்து வந்துள்ளனர்.

அதில் விஷ்ணு, சம்யுக்தாவால் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று பல பேட்டிகளை கொடுத்து வந்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நான் தான் ஏமாந்து விட்டேன் என்று சம்யுக்தாவும் கண்ணீர் வடித்து தன்னை நியாயப்படுத்தினார். ஆனால் அதை பார்க்க பலருக்கும் சம்யுக்தா மேல் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என வெளிப்படையாகவே தெரிந்தது. அதற்கேற்றார் போல் சமீபத்தில் அவர் குறித்த ஒரு விஷயம் வெளிவந்து அதிர்ச்சியை கிளப்பியது.

Also read: எல்லை மீறிய காதலன்.. டபுள் கேம் ஆடிய சம்யுக்தாவின் வண்டவாளத்தை வெளியே கொண்டு வந்த ஆடியோ

அதாவது விஷ்ணுவுடன் காதலில் இருக்கும் போதே அவர் நடித்த நிறைமாத நிலவே தொடரின் ஹீரோ ரவியுடனும் டச்சில் இருந்திருக்கிறார். சொல்லப்போனால் விஷ்ணுவின் காதலுக்கு முன்பாகவே இவர்கள் இருவரும் காதலித்து இருக்கின்றனர். ஆனால் ரவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் தான் இந்த காதல் முறிந்து போனதாக சம்யுக்தா கூறி இருக்கிறார்.

ஆனால் திருமணத்திற்கு முன்பு இது குறித்து விஷ்ணுவிடம் கூறாத அவர் இப்போது தன்னை நியாயப்படுத்திக்கொள்ள பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் விஷ்ணு பல ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ரவியும் தன் பங்குக்கு ஒரு விளக்கம் சொல்லி சம்யுக்தாவுக்கு தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

Also read: விஷ்ணு- சம்யுக்தா சண்டையை ஆரம்பித்ததை இவர்தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் செய்த மட்டமான வேலை

அந்த வகையில் நான் யாரிடமும் தவறாக நடந்து கொள்ளவில்லை. என்னை சேர்ந்தவர்களுக்கு என்னை பற்றி தெரியும். நான் அந்த மாதிரி குடும்பத்தில் பையன் கிடையாது. பெண்களுக்கு நான் மரியாதை கொடுப்பவன். யாரோ வந்து என்னிடம் காதலை சொன்னார்கள். அதை நான் மறுத்துவிட்டேன். அதனால் நான் எதற்கும் பொறுப்பாக முடியாது என தன் தரப்பு நியாயத்தையும் விளக்கி இருக்கிறார்.

இதன் மூலம் சம்யுக்தா, விஷ்ணு, ரவி இருவரிடமும் ஏதோ டபுள் கேம் ஆடி இருக்கிறார் என்பது மட்டும் நன்றாக புரிகிறது. அந்த வகையில் லவ் டுடே பாணியில் இவர் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஆனாலும் விஷ்ணு அதற்கு பதிலடி கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது சம்யுக்தாவின் மாமா குட்டியும் தரமான ஒரு பதிலை கொடுத்துள்ளார். இது சோசியல் மீடியாக்களுக்கு சரியான கன்டென்ட் ஆகவும் மாறி இருக்கிறது.

Also read: பிக் பாஸில் வந்த பிறகு சீரியல் வாய்ப்பும் பறிபோனதா? உண்மையை உடைத்த ரட்சிதா

- Advertisement -

Trending News