தமிழ் சினிமாவில் ஆன்லைனில் படங்கள் வெளியான அன்றே வெளியாவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் DVDகளும் முதல் நாளே விற்பனைக்கு வந்துவிடுகிறது.

அண்மையில் பெரிய தொகையில் தயாராகியுள்ள பாகுபலி 2 படமும் இதேபோல் வெளியாகி இருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் அண்மையில் போலிசில் புகார் அளித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  அர்ஜுன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டே - லேட்டஸ்ட் போட்டோ ஷூட் !

அதன்பேரில் போலீசார் இன்று நேதாஜி பஜார், பர்மா பஜார், ராட்டன் பஜார், சத்யா பஜார் என எல்லா இடத்திலும் முழு சோதனை செய்து 16 பேரை கைது செய்துள்ளனர். அதோடு 2100 DVDகளை கைப்பற்றியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் பேசிய கமல்ஹாசன்

போலீசாரின் இந்த அதிரடி நடிவடிக்கையால் அங்கு கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது.