fbpx
Connect with us

Cinemapettai

சக்ரா ட்ரைலரில் மறைந்திருந்து மிரட்டிய வில்லன் யார் தெரியுமா.. இப்படி லீக் பண்ணிட்டாங்களே விஷால்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சக்ரா ட்ரைலரில் மறைந்திருந்து மிரட்டிய வில்லன் யார் தெரியுமா.. இப்படி லீக் பண்ணிட்டாங்களே விஷால்

விஷால் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் சக்ரா. ஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. துப்பறிவாளன், இரும்புத்திரை அடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் டிரைலர் தான் நேற்று ட்ரெண்டிங்.

இப்படத்தின் ட்ரைலரில் ஹாக்கர் முகமூடி அணிந்து இருப்பது போன்றே காமித்துள்ளனர். அந்த ரோலில் நடித்துள்ளது ரெஜினா காசான்ட்ரா என்பது கோலிவுட் பட்சிகள் பலருக்கு தெரியும். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ரோலில் அவர் நடித்துள்ளார். அடுத்த ட்ரைலர் அல்லது போஸ்டரில் வில்லி ரெஜினா பற்றி கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் இப்பொழுது ட்ரைலர் வந்த பின் மெயின் வில்லன் யாராக இருக்கும் என்பது பலரின் ஆவலை அதிகரித்துள்ளது. இப்படம் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது.

தமிழ் ரசிகர்களை கவர விஷால், கன்னட ரசிகர்களுக்கு பரிச்சயமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் வேடம், டோலிவுட்டில் பிரபலமான ரெஜினா தான் வில்லி. இப்படி இருக்கும் பட்சத்தில் படத்தின் முக்கிய வில்லன் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகர் தான் என்கின்றனர் ஒரு சிலர்.

ஆனால் வேறு சிலரோ சக்ரா படத்தில் விஷால் டபிள் ஆக்ஷன் ரோலில் நடிக்கிறார். ரஜினியின் எந்திரன், கமலின் ஆளவந்தான் போல ஹீரோ மற்றும் வில்லன் வேடங்களில் நடிப்பது புரட்சி தளபதி விஷால் மட்டுமே என்கின்றனர்.

இந்த கிசு கிசு பற்றி தெளிவுகள் அடுத்தடுத்த அதிகாரபூர்வ அறிவிப்புகளில் தான் கிடைக்கும், அதுவரை காத்திருப்போம்.

Continue Reading
To Top