Connect with us
Cinemapettai

Cinemapettai

vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே ஒரு படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய அல்லோலப்படும் நடிகர் விஷால்.. 8 கோடி அபராதம்!

சென்ற ஆண்டு ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் ரவீந்திரன் தயாரிப்பில் விஷால்-தமன்னா நடிப்பில் வெளியான படம் தான் ஆக்‌ஷன்.

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. எனவே அந்த நஷ்டத்தை ஈடுகட்ட ரூ. 8,29,57,468 தொகையை திரும்பத் தருவதாக நடிகர் விஷால் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால் விஷால் செய்து கொடுத்த வாக்குறுதியின்படி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். அதுமட்டுமல்லாமல் தங்கள் நிறுவனத்தில் ஆனந்த் சொன்ன கதையையே விஷால் தன்னுடைய நிறுவனத்தில் ‘சக்ரா’ என்ற பெயரில் படத்தை எடுத்துள்ளதாக ரவீந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 30ஆம் தேதி சுமூகமாக இருதரப்பினரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டாததால், சக்ரா படத்தை OTT-யில் வெளியிடக்கூடாது என்று ரவீந்திரன் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு, ஆக்‌ஷன் படத்தில் ஏற்பட்ட 8 கோடி நஷ்டத்திற்கு விஷாலே பொறுப்பு என்றும்,

OTT தளத்தில் சக்ரா படத்தை வெளியிடக்கூடாது என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கை வரும் அக்டோபர் 9ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படி ‘சக்ரா’ என்ற ஒரே ஒரு படத்தை OTT-யில் ரிலீஸ் செய்ய முடியாமல், கடந்த சில மாதங்களாகவே கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாய் அல்லோலபட்டு வருகிறார் நடிகர் விஷால்.

Continue Reading
To Top