கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல.. 6 ஃப்ளாப் கொடுத்துவிட்டு விஷாலின் ஆணவ பேச்சு

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான லத்தி படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. சுனைனா, பிரபு மற்றும் பலர் நடித்திருந்த லத்தி படம் நீண்ட வருடங்களாக ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. விஷால் ரசிகர்கள் என்பதால் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

எனவே அடுத்தடுத்த நாட்களில் வசூலில் மண்ணை கவ்வியது. அதுமட்டுமின்றி சமீபகாலமாக விஷால் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த வகையில் சண்டைக்கோழி 2, ஆக்சன், அயோக்கியா, எனிமி, வீரமே வாகை சூடும், சக்ரா போன்ற படங்களின் தோல்வியை தொடர்ந்து இப்போது லத்தி படமும் தோல்வியடைந்துள்ளது.

Also Read : கமல், மணிரத்தினத்தை காப்பி அடித்த விஷால்.. கடைசியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்

இந்த சூழலில் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல ஒரு ஊடகத்தில் விஷால் கொடுத்திருக்கும் பேட்டி வேடிக்கையாக உள்ளது. அதாவது பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் விஷால் தற்போது வரை ஒரு விருது வாங்கியதில்லை. இதை எப்படி நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு விஷால் கூறிய பதில் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது நான்கு பேர் ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்தப் படத்திற்கு விருது கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னுடைய படம் வெளியாகும் போது திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை உற்று நோக்குவேன். அவர்கள் எந்த இடத்தில் கை தட்டுகிறார்கள், எந்த இடத்தில் சோர்வடைகிறார்கள் என்பதைப் பார்த்து என்னுடைய தவறை புரிந்து கொண்டு அடுத்த படத்தில் அதை மாற்றிக் கொள்ள முயல்வேன்.

Also Read : சுழட்டி அடிக்கப்பட்ட லத்தி.. முதல் நாள் வசூலில் மண்ணை கவ்விய விஷால்

ஆகையால் தற்போது வரை விருது என்பதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை என்ு விஷால் கூறியுள்ளார். தொடர்ந்து இவருடைய படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் தான் படம் பிளாப் ஆகி வருகிறது. ஆனால் மனசாட்சியே இல்லாமல் விஷால் இவ்வாறு பேசுகிறார் என்று பலரும் கருத்து கூறுகிறார்கள்.

மேலும் நான் முதலமைச்சர் ஆனால் முதலில் மருத்துவம் மற்றும் கல்வி இரண்டையும் இலவசமாக கொடுப்பேன். அதுமட்டுமின்றி டோல்கேட் வரியை கண்டிப்பாக நிறுத்துவேன். ஏனென்றால் தற்போது உள்ள ரோடு எதுவும் சரியாக இல்லை, அதற்கு ஏன் வரி கட்ட வேண்டும் என்று விஷால் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Also Read : அத்தனையும் நடிப்பு, உள்ளுக்குள்ள அம்புட்டு ஆசை.. உடைந்து போன விஷால் போடும் வெளி வேஷம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்