Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் மனதுக்கு மிகவும் நெருக்கமான போட்டோ. லைக்ஸ் அள்ளுது விஷால் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.
விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா – சாயீஷா திருமணத்திற்கு தன் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
விஷால் ஆர்யா
தமிழ் சினிமாவில் மோஸ்ட் எலிஜிபில் பாச்சிலர்ஸ் இவர்கள். நடிப்பு, தயாரிப்பு என இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். விஷால் மறுபுறம் அரசியல், பொதுசேவை என இருப்பார். ஆர்யாவோ பிட்னஸ், சைக்ளிங் என்று நேரத்தை பயன்படுத்துபவர்.
இந்த இரண்டு ஹீரோக்களும் தங்கள் காதலியை அறிமுகப்படுத்திவிட்டனர்.

anisha alla vishal
ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டியை (‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தில் ஹீரோவுக்கு தோழி ரோலில் நடித்தவர்). திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கடந்த பொங்கல் தினத்தன்று இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் விஷால்.

arya
அதேபோல், ஆர்யாவும் சயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதை காதலர் தினத்தன்று இந்தத் தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார் ஆர்யா.
ஆர்யாவின் திருமணம் மார்ச்சில் நடைபெறவுள்ளது. எனவே திருமணப் பத்திரிகை கொடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் ஆர்யா. அதன்படி, விஷாலுக்கும் பத்திரிகை கொடுத்துள்ளார் ஆர்யா. அப்போது புகைப்படம் எடுத்து, தன்னுடைய வாழ்த்துச்செய்தியையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விஷால்.

Arya Vishal
“இந்த போட்டோ என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்த ஒன்று . நம்பமுடியவில்லை என் நெருங்கிய நண்பன் ஆர்யாவின் திருமணப் பத்திரிகையைக் கையில் வைத்திருக்கிறேன் . ஆர்யாவுக்கும் சயிஷாவுக்கும் ஆல் தி பெஸ்ட், என் அன்பையும் பகிர்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் ” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஷால்.
This pic is the closest to my heart. Unbelievable moment to hold my best friend’s @arya_offl wedding invitation .. wishing him and @sayyeshaa all the best and lots of love .. God bless ! pic.twitter.com/6rDhNwOY1V
— Vishal (@VishalKOfficial) February 27, 2019
ட்விட்டரில் 10000 லைக்ஸ் பெற்றுள்ளது இந்த போட்டோ.
