fbpx
Connect with us

நடிகைகளுக்கு பிரச்சனையா?ஒரு புகார் கொடுங்க..அப்பறம் பாருங்க..!! – விஷால்

Vishal-Team-Election

News | செய்திகள்

நடிகைகளுக்கு பிரச்சனையா?ஒரு புகார் கொடுங்க..அப்பறம் பாருங்க..!! – விஷால்

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூற முடியாது. ஆனால் பிரச்சனைகள் உள்ளது. அவர்கள் புகார் அளித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறினார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தற்போது வரும் ஏப்ரல் 2-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கேயார், விஷால், டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், பாண்டியராஜ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் விஷால் அணியின் சார்பாக துணை தலைவர் மற்றும் பிற பொறுப்புகளுக்கு போட்டியிடுகின்றனர். இந்நிலையில் விஷால் மற்றும் மிஷ்கின் உள்ளிட்டவர்கள் புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய விஷால், ‘தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் எங்கள் அணி நிச்சயம் வெற்றி பெறும். நாங்கள் ஒரு குடும்பம் போல செயல்படுவோம். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தயாரிப்பாளர்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டு வருகிறோம். தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் இதுவரையில் அரசியல் தலையீடு இல்லை. எங்கள் அணியில் இணைந்துள்ளவர்கள் எங்களுடன்தான் இணைந்து பணியாற்றுவார்கள். அவர்கள் இணைந்து பணியாற்ற உழைத்து வருகிறோம். தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூற முடியாது. ஆனால் பிரச்சனைகள் உள்ளது. அவர்கள் புகார் அளித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top