மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’.விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தில் அனு இம்மானுவேல், வினய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  விவசாயத்தில் இறங்கிய விஷால் - அதிரடி முடிவு

ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதையாக `துப்பறிவாளன்’ உருவாகி வருகிறது.

படத்தில் அறிவுப் பூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், இதோடு ஒரு மெல்லிய காதல் இருக்கும் என்று படத்தின் இயக்குநர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.அருள் கொரோல்லி இசையமைத்திருக்கும் இந்த படத்தில் இருந்து பாடல் ஒன்று இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  இளையராஜா இசையில் நடிக்கவந்த வாய்ப்பை தவறவிட்ட சிவகார்த்திகேயன்!

இது விஷால் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.அதேபோல் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படத்தில் இருந்தும் குத்து பாடல் ஒன்று இன்று வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.