விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் பிரபல நடிகரிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார்.

Vishal
Vishal

தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார்.  தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பை ஏற்றதும் நடிகர் விஷால் மிகவும் பிஸியாகவே இருக்கிறார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் அதன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

vishal
vishal

‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுனுடன் நடித்துவருவது குறித்து விஷால் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இவ்விரண்டு படங்களையுமே விஷால் தயாரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

vishal

மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.

திரையுலகில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். தற்போது மீண்டும் அர்ஜுனுடன் நடித்து வருவது குறித்து விஷால் கூறிருப்பதாவது:

vishal

என்னுடைய திரையுலக வாழ்க்கையே ஒரு வட்டமாகத் தான் தெரிகிறது. நான் யாரிடம் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் ஊதியத்தை பெற்றோனோ அவரே எனக்கு வில்லனாக ‘இரும்பு திரை’ படத்தில் நடிக்கிறார்.

ஆனால் இப்போதும் அவர் தான் எனக்கு குரு. அவர் தான் அர்ஜுன். இது ஒரு உயிரோட்டமான பயணம். நாங்கள் படத்தில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வரும்.

முக்கியமாக க்ளைமாக்ஸில் நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி. எங்கள் இணையைக் காண காத்திருங்கள்!