விஷால் கடந்த சில நாட்களாகவே பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். இதில் குறிப்பாக திருட்டு விசிடிக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுகிறார்.

இந்நிலையில் இவர் நடித்து வரும் கத்திச்சண்டை படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது விஷாலுக்கு தோல்பட்டையில் பலத்த அடி விழுந்துள்ளது.

வலி தாங்க முடியாமல் விஷால் துடிக்க, உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு விஷாலை அழைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.