விஷால் நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நிலையில், தற்போது படத்தை நவம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படம் முடிவடைந்துள்ள நிலையில், விஷால் தற்போது மிஷ்கின் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் முடிவடைந்த கையோடு பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்திலும் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பாக ‘இரும்புகுதிரை’ என்று வைத்துள்ளனர். இந்த தலைப்பு சிவாஜி கணேசன் நடித்த பழைய படம் ஒன்றின் தலைப்பாகும்.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் வில்லன் வேடத்தில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், விஷாலுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான ஆர்யாவை இப்படத்தில் வில்லனாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆர்யாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.