vishal-vijayவிஜய் நடித்த கத்தி மற்றும் விஷால் நடித்த ‘பூஜை’ ஆகிய திரைப்படங்கள் கடந்த 2014ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் மோதியது. இந்நிலையில் மீண்டும் தற்போது விஜய்-விஷால் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடித்துள்ள பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ள படம் தெறி. இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதே நாளில் விஷால் நடித்து முடித்துள்ள ‘மருது’ படமும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

நடிகர் சங்க தேர்தலின்போது கலைப்புலி எஸ்.தாணு, விஷாலுக்கு எதிராக செயல்பட்டதால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தெறி ரிலீஸாகும் அதே தேதியில் மருது படமும் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.