தெலுங்கும் தமிழும் ஒன்றாய் சேர்ந்து ‘தெலுஷ்’ ஆகிவிடும் என்று கணக்குப் போட்டால், அங்கு விழுந்ததய்யா கோடாலி. விஷால் வரலட்சுமி லவ் பிரேக் ஆகிவிட்டதாக நேற்றிலிருந்தே பரபரப்பு. இந்த ஜோடியின் காதல் வரலாறுக்கு வளவளவென முன்னுரை அவசியம் இல்லை. சுமார் ஒரு வருஷம் ஒரே வீட்டில் சேர்ந்தே வாழ்ந்தார்கள் என்கிற அளவுக்கு வலிமையான காதல் அது!

அதில்தான் அநாவசியமாக ஒரு பொத்தல் விழுந்துவிட்டது நேற்று. “ஒரு நபர் தனது 7 ஆண்டு கால உறவை தன் மேனேஜர் மூலமாக முறித்துக் கொண்டார். உண்மையான காதல் எங்கே?” என்று ட்விட் பண்ணியிருந்தார் வரலட்சுமி.

குணத்திலும், லொட லொட பேச்சிலும், அதிரடி ஆக்டிவிடீஸ்களிலும் வரலட்சுமி ஒரு இரும்புப் பெண்மணிதான். சந்தேகமில்லை. தனது காதலை முறித்துக் கொள்ள நேர்ந்தால், அல்லது தனது காதல் ‘பொங்கலில்’ ஏதேனும் பல்லி விழ நேரிட்டால் வரலட்சுமியின் ரீயாக்ஷன் இப்படியிருக்காது என்பதுதான் அவரை அறிந்தவர்களின் கருத்து. நேரடியாகவே விஷால் பெயரை குறிப்பிட்டு எழுதுகிற அளவுக்கு தில்லானவர்தான் அவர்.

அப்படியென்றால் அவர் குறிப்பிட்டிருப்பது யாரை? எந்த காதல் ஜோடியை? இதுதான் இப்போதைய சந்தேகம். வரலட்சமியிடம் விசாரித்தால், “அதில் நான் சொன்னது என் சொந்த வாழ்க்கை பற்றி அல்ல” என்று கூறிவிட்டார். தீர்ந்தது சந்தேகம். இருந்தாலும் இந்த ட்விட் பற்றி விஷால் ஏதேனும் கருத்து சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? இந்த நிமிஷம் வரைக்கும் அவர் வாயை திறக்கவேயில்லை.

இதற்கிடையில் கோடம்பாக்கத்தில் சில முக்கியஸ்தர்கள் இது பற்றி கிசுகிசுக்கிறார்கள். விஷாலுக்கு தமிழ்நாட்டு அரசியல் மீது ஒரு கண் இருக்கிறது. ஆனால் தனது தெலுங்கர் இமேஜ் அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது. அதற்காகவே ஒரு தமிழ் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான ஸ்டெப்தான் வரலட்சுமியை காதலித்து வந்தது. ஆனால் நடுவில் விஷாலுக்கு புத்திமதி சொன்ன சிலர், உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு வரலட்சுமி சார்ந்திருக்கிற சாதியை விட, இன்னொரு சாதிக்கார பெண்ணாக இருந்தால் சரியாக இருக்கும் என்று கூறி, அந்த சாதி என்னவாக இருக்க வேண்டும் என்பதாகவும் கிளாஸ் எடுத்தார்களாம். ஆக சாதி ரீதியாக தன் காதலை விஷால் மாற்றிக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள்!

தலையை சுற்றி மூக்கை தொடலாம். ஆனால் மூக்கேக் கிளம்பிப் போய் தலையை சுத்துதே?