ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சுயேட்சை வேட்பாளராக விஷால் களமிறங்குகிறார்.

vishal
vishal

முன்னரே டிசம்பர் 21ல் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி வந்த நிலையில். நேற்று இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஷால். வரும் திங்கள்கிழமை அவர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட போதே கடும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகியுள்ளார். தற்பொழுது அரசியல் பிரவேசம் செய்கிறார்.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “விஷால் ஒன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல அல்ல. நடிகர் விஷாலுக்கு நிச்சயம் ஆர்கே நகரில் டெபாசிட் கூட கிடைக்காது. அவரது அரசியல் கனவோடு திரை வாழ்க்கையும் அஸ்தமிக்கப் போகிறது.” என்றார்.

விஷாலுக்கு ஆதரவாக இயக்குனர் சுசீந்திரன் இந்த ட்விட்டர் பதிவை போட்டுள்ளார்.

Director_Suseenthran
Director_Suseenthran

‘ஒருபுறம் அவருக்கு அதிகரிக்கும் ஆதரவு; மறுபுறம் என்ன நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால் ?’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.