மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, சிம்ரன், வினய், கே.பாக்ய ராஜ், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 14-ந்தேதி இந்த படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கிறது.

அதோடு, நேற்றைய தினம் துப்பறிவாளன் படத்தின் டிரெய்லர் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று வெளியாகவில்லை. அதையடுத்து, செப்டம்பர் 10-ந்தேதியான இன்று துப்பறிவாளன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.இதோ துப்பறிவாளன் டீசர் உங்களுக்காக.