திருட்டு விசிடியை ஒழிக்கும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மே 30-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் என்று விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அவருக்கு ஆதரவு தர பல சினிமா சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் சங்கமும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பும் ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் பங்கு பெறமாட்டோம் என்று அறிவித்துள்ளது போல் தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என்று அறிவித்துள்ளது.

அதிகம் படித்தவை:  கலையரசன் - ஆனந்தி நடிப்பில் டைட்டானிக் படத்தின் "யாழினி" பாடல் ப்ரோமோ வீடியோ !

வர்த்தக சபை கூட்டம் இன்று தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. அதில் தாணு, சரத்குமார், ராதாரவி, சேரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் படித்தவை:  வாயை அடக்காததால் மீண்டும் பிரச்சினையில் நடிகை கஸ்தூரி..!

கூட்டத்தின் முடிவில் வரும் 30ந் தேதி மாத்திரமல்ல வேறு தேதியிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என்று முடிவெடுத்தனர்.