பாலியல் தொல்லையை ஜாதிப் பிரச்சனையா? கொந்தளிக்கும் விஷால்!

தற்போது தமிழகமெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் #PSBB பள்ளியின் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவது தான்.

அந்த பள்ளியில் இன்னும் 3 ஆசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் வாக்குமூலம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி பாலியல் தொல்லை கொடுக்கும் அவர்களை தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசமாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது வரை ஆசிரியரோ, பள்ளி நிர்வாகமோ மாணவிகளின் பெற்றோர்களிடம் எந்த ஒரு மன்னிப்பும் கேட்கவில்லை.

இதுவே அதிகார அத்துமீறலாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த பாலியல் தொல்லை மற்ற பள்ளிகளிலும் இருப்பதாக மாணவிகள் தற்போது பதிவிடுவது நினைத்து வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனையை ஜாதிப் பிரச்சனையாக மாற்றும் மக்கள், சமூக ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் விஷால். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், உரிய விசாரணை செய்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் விஷால்.

vishal-tweet
vishal-tweet

இப்படி சாதிப்பிரச்சனை, சமூக பிரச்சினைகளை முன்வைத்து விஷால் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -spot_img

Trending News