கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார் நடிகர் கருணாஸ். கூவத்தூரில் அவர் பண்ணிய காரியங்கள் அனைத்தும் அந்த ரகம். சமூகவலைத் தளங்களில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை  அவருக்கு பிறந்த நாள்.

ஆனால் வாழ்த்துச் சொல்வதற்கு  அவரது புலிப்படையே முன் வரவில்லை. சொந்த சமூகமும் கடும் எதிர்ப்பு . வெளியே தலை காட்டினால் இளைஞர்கள் திட்டி தீர்க்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்.

நடிகர் விஷாலிடம் போன் பண்ணி, “மாப்ளே அப்படி என்னடா தப்பு பண்ணிட்டேன். ஒரு சேவைதானே செய்தேன். அதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு” என்று கண்கலங்கினார் என்கிறது அந்த சினிமா “கூத்துப்” பத்திரிக்கை.

அதற்கு விஷாலும் ஆறுதல் சொல்லி  இருக்கிறார். விரைவில் விஷாலிடம் இருந்து கருணாசுக்கு ஆதரவாக அறிக்கை வரலாம் என்கிறது அந்த சினிமா வாரப் பத்திரிக்கை. சேவையா…? அப்படின்னா என்ன நண்பர்களே  ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here