fbpx
Connect with us

இராஜபாளையம் மக்களுக்காக விஷால்,ஸ்ரீ திவ்யா,சூரி செய்த உதவி

இராஜபாளையம் மக்களுக்காக விஷால்,ஸ்ரீ திவ்யா,சூரி செய்த உதவி

vishal-sri-divyaஇராஜபாளையம் பகுதியில் விஷால் நடித்த ‘மருது’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடித்து திரும்பும் முன் அந்த பகுதி மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஷால் ஐந்து கழிவறைகளை தனது சொந்த செலவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். தற்போது 5 கழிவறைகள் கட்டும் பணி விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘மருது’ படத்தின் கதாநாயகி ஸ்ரீதிவ்யா, மற்றும் காமெடி நடிகர் சூரி ஆகிய இருவரும் இணைந்து இராஜபாளையம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் பத்து கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ.80,000 அளித்துள்ளனர். இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ‘மருது’ படத்தின் டெக்னீஷியன்களும் விரைவில் அந்த பகுதி மக்களுக்கு ஒருசில உதவிகளை செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top