தமிழ் பிரபல நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும், உம்மிடி நகைக்கடை வாரிசு க்ரித்திஷ் உம்மிடிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். குஷ்பு, சுந்தர் சி., சுஹாசினி மணிரத்னம், கார்த்தி, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், அர்ஜுனின் மனைவி ஆஷா உள்ளிட்ட ஏராளமானோர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.