இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால்.. ரொம்ப ஓவரா தான் போறீங்க

சமீபகாலமாக விஷாலை பற்றி எதிர்மறையான விஷயங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. ஆரம்பத்தில் இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தற்போது இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை.

துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போது விஷால், மிஸ்கின் இருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் மிஷ்கினை படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பண மோசடி வழக்கில் சிக்கினார். அதாவது பாலுமகேந்திராவிடம் விஷால் மற்றும் கௌதம் மேனன் இருவரும் பணம் வாங்கியுள்ளனர்.

ஆனால் கௌதம் மேனன் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறிவிட்டார். ஆனால் விஷால் இதைப் பற்றி எதுவும் கூறாமல் இழுத்தடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விஷால் லத்தி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஒரு பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்தார். ஆனால் இந்த விஷயம் இயக்குனருக்கே தெரியாதாம். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் விஷாலின் நண்பர்களாம்.

அதனால் விஷாலின் பேச்சை கேட்ட இயக்குனருக்கே தெரியாமல் ரிலீஸ் அறிவித்துள்ளனர். தற்போது யாரை கேட்டு ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என இயக்குனர் வினோத் குமார் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். இவ்வாறு விஷால் தொடர்ந்து தன் பட இயக்குனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் விஷால் படத்தை இயக்க பல இயக்குனர்களும் தற்போது தயங்குகின்றனர்.

Next Story

- Advertisement -