தமிழ் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் வைத்த 13 கோரிக்கைகள் என்னவென்றால்,


தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்,படம் தயாராகும் வரை 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமே GST விதிக்க வேண்டும், புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும். திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக மாற்ற வேண்டும், திருட்டு விசிடி ஒழிக்க காவல் துறையில் 96 பேர் கொண்ட குழுவை 1000 பேர் கொண்ட குழுவாக மாற்றி அமைக்க அனுமதி வழங்க வேண்டும், திருட்டு விசிடி தடுப்பு பணியை திரையுலகம் செய்ய அரசு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்

பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், ஆந்திரா போல் தமிழகத்திலும் மினி தியேட்டர் உடனடியாக கட்டப்பட வேண்டும்,

தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும் , பாடல் காட்சிகளாகவும் தொடர்ந்து ஒளிபரப்பதை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஒரு திரையரங்களுக்கு மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமையை உரிமையாளர்களுக்கு அரசு தர வேண்டும்,உரிமமின்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகளின் தொழில் உரிமம் உடனடியாக ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டுமென ஆகிய 13 கோரிக்கைகளை விஷால் முன் வைத்துள்ளார்.

இதனை அரசு 30 நாள்களில் செய்ய தவறினால் வருகிற மே 30ம் தேதி காலை 8.30 முதல் திரையுலகம் தொடர் வேலைநிறுத்தம் போராட்டம், திரையரங்களில் படக்காட்சி ரத்து, இனி எந்த புதிய படமும் வெளியே வராது, தமிழகம் முழுவதும் படப்பிடிப்பு நடக்காது என, தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.