fbpx
Connect with us

விஷாலை வைத்துப் படமெடுத்து அவமானப் பட்டேன்!- ஒரு தயாரிப்பாளரின் குமுறல்!

Vishal-Producer

விஷாலை வைத்துப் படமெடுத்து அவமானப் பட்டேன்!- ஒரு தயாரிப்பாளரின் குமுறல்!

தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு பத்திரிகையாளர்களிடம் செல்போனில் லைவாக பேச வைத்தார்.

வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களம் இப்போது சூடு பிடித்துள்ளது. பரபரப்பான இத்தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கியுள்ள ‘தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ சார்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் ஆய்வுக் கூடத்தின் திரையரங்கில் நடைபெற்றது.

விஷாலை வைத்து படமெடுத்த 12 தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். 12 படங்கள் தோல்வி யடைந்துள்ளன.

உதாரணத்துக்கு ‘சமர்’ படம் எடுத்த தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடுவின் அனுபவத்தைக் கேளுங்கள் (தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு ஊடகங்கள் முன் பேசவிட்டார். ரமேஷ் நாயுடு பேசும் போது- ” நான் ‘சமர்’ படத்தின் தயாரிப்பளர் பேசுகிறேன். அன்று ‘சமர்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பாண்டிச் சேரியில் படமாகிக் கொண்டிருந்தது . நூற்றுக் கணக்கான துணை நடிகர்கள் இருக்கிறார்கள் .கனல் கண்ணன்தான் ஸ்டண்ட் மாஸ்டர். கடைசி நாள். பூசணிக்காய் உடைக்க வேண்டும் என்பதால் நான் மதிய உணவு இடைவேளையின் போது என் மனைவி, மகன் என்று குடும்பத்துடன் அங்கே போனேன்.

ஆனால் தயாரிப்பாளர் இங்கு வந்தால், இருக்கமாட்டேன் நடிக்க மாட்டேன் என்று விஷால் அங்கிருந்து கிளம்பி வெளியேறி விட்டார். அதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இத்தனைக்கும் அவருக்கு நான் சம்பளம் முழுதும் கொடுத்து விட்டேன்.

கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமையைப் பாருங்கள். நான் படப்பிடிப்புக்கு வரக் கூடாதாம். அந்த ஒரு படத்தோடு தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன். எனக்கு நேர்ந்த அவமானம் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது.” என்றார் குமுறலுடன்)

பிறகு தாணு தொடர்ந்து பேசும் போது, ”பார்த்தீர்களா ஒரு தயாரிப்பாளரின் நிலைமையை? விஷால் இது என்ன கேலிக் கூத்து? அப்படி எதற்கு உனக்கு இந்த பதவி வெறி..? ஏன் இந்த நாற்காலி வெறி..? நீ ஒரு அழிவு சக்தி? தேர்தலில் இன்னொரு அணியில் நிற்கும் கேயார் சங்கப் பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்தவர்.

1. 35 கோடிரூபாய், அந்த டிரஸ்ட் பணத்தைத் தராமல் இருந்தவர். போராடித்தான் வாங்கினோம். இது அவர் கூட இருக்கும் எஸ்.ஏ.சிக்கும் தெரியும். விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு 4 கோடி என்பது முதல் பிரதி பட்ஜெட்டாம். படம் 21 கோடி ரூபாய் வியாபாரமாம். 17 கோடி லாபமாம். இதை வைத்து யாருக்கு உதவப் போகிறாய் விஷால் ? என்றார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top