Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்கும் உன்னை விட்டா ஆளில்ல, உனக்கும் என்ன விட்டா ஆளில்லை.. மிஷ்கினிடம் தஞ்சமடைந்த விஷால்
கொஞ்ச நாளைக்கு முன்பு மிஸ்கின், விஷால் பிரச்சனைதான் தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவரும் மாறி மாறி தங்களைத் தாங்களே கழுவி ஊற்றிக் கொண்டதை பார்க்க முடிந்தது.
அதிலும் மிஸ்கின் உச்சத்துக்கு போய் விஷால் என்னை தே**யா என்று கூறியதாகவும் குண்டை தூக்கி போட்டார். என்னடா ரெண்டு பேரும் கேவலமா திட்டிகாறாங்க, இனி ஒன்று சேரவே மாட்டாங்க போல என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் சினிமா என்றால் சேறும் சகதியும் இருக்கத்தான் செய்யும் என்பதை உணர்த்தி விட்டார்கள் இருவரும். தற்போது இருவரும் ராசி ஆகி விட்டார்களாம். நீ இல்லாம நான் இல்ல, நான் இல்லாமல் நீ இல்லை எனும் அளவுக்கு பாசமழை பொழிகிறதாம்.
அதற்கான காரணத்தைத் தேடிப் பார்த்தால் தான் தெரிகிறது அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு என்று. மிஸ்கின் எழுதிய துப்பறிவாளன்-2 கதை சுத்தமாக விஷாலுக்கு புரியவில்லையாம்.
மிஸ்கின் கை விட்டதை நான் இயக்குகிறேன் என வீராப்பாக இயக்கி வந்த விஷால், படத்தில் பல குழப்பங்களை செய்துவிட்டாராம். எடுத்தவரை போட்டுப் பார்த்தால் எடுக்காமலேயே இருந்துருக்கலாம் எனும் அளவுக்கு இருக்கிறதாம் அந்த படம்.
இதனால் சமீபத்தில் மிஸ்கின் கொடுத்த பேட்டியை பார்த்துவிட்டு, மீண்டும் அண்ணா, தம்பி என ஒன்று சேர்ந்து விட்டார்களாம். ஊரடங்கு முடிந்த பின் உடனடியாக துப்பறிவாளன் 2 முழு படத்தையும் எடுத்து முடிப்பது தான் அவர்களது முதல் வேலையாம்.
உருட்டும் புரட்டும் ஒன்பது நாளைக்கு தான் என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்!
