விஷால் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வெற்றிப்படம் என்று பார்த்தால் அது இரும்புத்திரை திரைப்படம் தான். இரும்புத்திரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் கதையைப் போலவே சக்ரா எனும் படத்தின் கதையை உருவாக்கி நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான சக்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
மேலும் அதற்கு முன்னர் விஷால் நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் சமீப காலமாக மன ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறாராம் விஷால். ஒரு சில நேரத்தில் தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்கே தெரியாத அளவுக்கு பித்து பிடித்துப் போய் உள்ளாராம்.
விஷால் அடுத்ததாக பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் திரைப்படம் எனிமி. இருமுகன் என்ற வெற்றி படத்தை கொடுத்த ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக அவரது நண்பர் ஆர்யா நடித்து வருகிறார்.
எனிமி படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில் அந்த படத்தின் மீது தற்போது கொஞ்சம் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் எனிமி படத்தின் படப்பிடிப்புகள் தற்போது துபாயில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் துபாயில் முதல் நாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷால் அதன் பிறகு முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் மூன்று நாட்கள் படப்பிடிப்பிற்கு வரவில்லையாம். மேலும் தன்னுடைய தொடர்புகளை அணைத்துவிட்டு பேச்சு மூச்சில்லாமல் எங்கேயோ கிளம்பி விட்டாராம்.

இதேபோல்தான் ஐதராபாத் படப்பிடிப்பிலும் சொல்லாமல் கொள்ளாமல் சென்றதால் படப்பிடிப்பில் பாதி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் வருத்தப்படுகிறார். அவரே ஒரு தயாரிப்பாளராக இருந்து கொண்டு இப்படி செய்யலாமா என குமுறுகிறாராம் எனிமி பட தயாரிப்பாளர். இப்படித்தான் ஒரு காலத்தில் சிம்பு செய்து வந்தார். தற்போது சிம்பு திருந்தி சினிமாவில் ஒழுக்கமாக நடித்து வரும் இந்த வேளையில் அடுத்த சிம்புவாக உருவெடுத்துள்ளாராம் விஷால்.