fbpx
Connect with us

Cinemapettai

சுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…

Tamil Nadu | தமிழ் நாடு

சுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி…

தமிழகத்தையே உலக்கிய சுவாதி கொலை வழக்கின் படக்குழுவிற்கு நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் படத்தின் பெயரை மாற்றும் அளவுக்கு ஏன் இந்த பயம் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மென்பொறியாளர் சுவாதி நுங்கப்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல தனிப்படைகளை அமைத்த காவல்துறை ராம்குமார் என்பவரை கைது செய்தது. ஆனால், அவர் கைது செய்யும் போதே கழுத்தை அறுத்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நடைபெற்ற வழக்கும் விசாரணையில் ஒரு முடிவு எட்டப்படும் என தமிழகமே காத்திருந்த நிலையில், சிறையில் மின்சாரம் தாக்கி ராம்குமார் உயிரிழந்தார். இதனால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பல மர்ம முடிச்சுகளை கொண்ட இவ்வழக்கின் உண்மை பலருக்கு இன்று வரை தெரியவில்லை.

இக்கதையை பின்னணியாக கொண்டு சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் படம் தயாராகி இருந்தது. ஆனால், படத்தின் இயக்குனருக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. சுவாதியின் தகப்பனாரே இக்கதையை இயக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து தணிக்கை துறையும் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் பெயர் நுங்கம்பாக்கம் என மாற்றப்பட்டு இருக்கிறது. படத்தை ரமேஷ் செல்வன் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கதையில் சில மாற்றங்களை செய்து ‘நுங்கம்பாக்கம்’ படத்தை எடுத்துள்ளார். ஜெயசுப ஸ்ரீ புரோடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நடிகர் விஷால், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சினேகன், அஜ்மல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுக்க இங்கு பல தடைகள் இருக்கிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சிலருக்கு பிடிக்கவில்லை. எனது இரும்புத்திரை படத்தில் ஆதாரால் ஏற்படும் பிரச்சனைகளை சொன்னோம். அதற்கு மெர்சல் படம் போல் மாபெரும் எதிர்ப்பு நிலவியது. தியேட்டர்களில் படக்காட்சிகள் குறைக்கப்பட்டது. அதேப்போல இப்படத்தின் நுங்கம்பாக்கம் படுகொலை குறித்து கூறி இருக்கிறார்கள்.

பத்திரிக்கை செய்திகள் மட்டுமே நமக்கு தெரியும். உண்மை பின்னணி நமக்கு தெரியாது. அதை ஒரு படைப்பாளி மட்டுமே சொல்ல முடியும். அதை சொன்னால் தடுக்கப்படுகிறார்கள். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஆர்.கே.செல்வமணி இயக்கிய குற்றப்பத்திரிகை படமும் எதிர்ப்பினால் இதுவரை திரைக்கு வரவில்லை. நடந்த சம்பவத்தை இயக்குனர் படமாக்கும்போது எதிர்ப்பது முறையல்ல. தலைப்பை மாற்ற வேண்டிய அளவுக்கு இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று புரியவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top