கடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது “பீட்டா” விஷால் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகா் விஷால்.

இதனால் அவருக்கு மாணவா்கள், இளைஞா்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டத்தை திசைத் திருப்பும் விதமாக ஜல்லிக்கட்டை ஆதரித்து நடிகா் சங்கம் உண்ணாவிரதம் இருந்தது.

இதற்கும் மாணவர்கள், இளைஞா்கள் எதிர்ப்பு தெரிவித்தனா். பல நடிகா்கள் மக்களோடு, மக்களாக வந்து மொினா போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

தற்போது இவரும் புறப்பட்டுவிட்டார் நெடுவாசல் நோக்கி இதனை, கிராமமக்கள், மாணவா்கள், இளைஞா்கள் ஏற்பார்களா.. என்பது சந்தேகம்தான்.

நிலை இப்படி இருக்க விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள் என்று நடிகர் விஷால் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று விஜய்சங்கர் இயக்கத்தில் உருவான ‘ஒரு கனவு போல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில் பங்கேற்று விஷால் பேசுகையில். ”விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

என் அலுவலகத்தில் நெடுவாசல் விவசாயிகள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நான் அந்த விவசாயிகளுடன் இணைந்து நெடுவாசல் புறப்படுகிறேன். இன்று முதல் நெடுவாசலில் மக்களோடு மக்களாக இணைந்து என் ஆதரவைத் தெரிவிக்க உள்ளேன்” என்று விஷால் பேசினார்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும், கருவேல மரங்களை அகற்றும் பணியில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் எனவும் விஷால் கோரிக்கை விடுத்திருந்தார்.