fbpx
Connect with us

Cinemapettai

பிரியா பவானி சங்கரை தட்டி தூக்கிய விஷால்.. ஹீரோயின் செலக்ட் பண்றதுல இருக்குற ஆர்வம் ஸ்க்ரிப்ட்லயும் வேணும் சாரே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரியா பவானி சங்கரை தட்டி தூக்கிய விஷால்.. ஹீரோயின் செலக்ட் பண்றதுல இருக்குற ஆர்வம் ஸ்க்ரிப்ட்லயும் வேணும் சாரே

விஷால் என்ற நடிகரின் படம் தியேட்டரில் வெற்றி பெற்று பல நாட்கள் ஆகிவிட்டது. கடைசியா துப்பறிவாளன் சமயத்தில் பார்த்தது, அதன் பிறகு பல படங்கள் நடித்தும் வெற்றி கிடைக்கவில்லை.

கடைசியாக விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் படம் படுதோல்வி அடைந்து அவரது சினிமா வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

இதனால் எப்படியாவது அடுத்த படத்தின் வெற்றியை கொடுத்து விட வேண்டும் என மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வந்தார். அவரது கெட்ட நேரமோ என்னமோ, பாதி கிணறு தாண்டி மீதி தாண்ட முடியாமல் விழித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் விஷால். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமீபத்திய சென்சேஷன் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்துள்ளார்.

படத்துக்கு படம் புது நடிகைகளை புக் பண்ணுவதில் காட்டும் ஆர்வத்தை ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ணுவதில் காட்டினால் நல்லது என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில். ஏற்கனவே நடிகர் சங்கப் பிரச்சனையில் தலைமறைவாக இருந்த விஷால் இந்த படத்தின் மூலம் விட்டதை பிடிக்க மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்.

Continue Reading
To Top