சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கியிருக்கும் கத்தி சண்டை படத்தில் விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். நந்தகோபால் இப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். எனவே இப்படம் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

முதலில் இப்படம் நவம்பர் இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் கரன்ஸி பிரச்சனையால் பின்னர் இப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு வந்த அதிகாரப்பூர்வ தகவலின்படி இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலில்தான் வெளியாகுமாம்.

அதேநாளில்தான் விஜய்யின் பைரவா படமும் வெளியாகவுள்ளது. இப்போது என்ன நடந்ததோ தெரியவில்லை, விஷால் தனது முடிவை மாற்றி கத்தி சண்டையை பின்பு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.