Connect with us
Cinemapettai

Cinemapettai

vishal-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷாலுக்கு ஜோடியாகும் டிக் டாக் பிரபலம்.. ஒரே ஒரு வீடியோவால் கொட்டும் அதிர்ஷ்டம்

யார் யாரெல்லாம் டிக் டாக்கை பொழுதுபோக்கு என்று நினைத்தார்களோ அது தான் தற்போது தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஒரு அழகான பெண் வீடியோ செய்துவிட்டால் போதும். உடனடியாக மொத்த தமிழ் நாட்டு இளைஞர்களும் லைக் பண்ணி அவரை கதாநாயகியாக மாற்றிவிடுகின்றனர்.

விஷால் சமீபத்தில் தான் சக்ரா படப்பிடிப்பு முழுவதுமாக முடித்தார். சக்ரா படம் வருகிற தீபாவளிக்கு குறிப்பிட்ட OTT தளத்தில் வெளியாக உள்ளதாம்.

அதனைத் தொடர்ந்து தற்போது விஷால் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். ஆனந்த் சங்கர் இயக்கும் அந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிக் டாக் பிரபலம் மிருணாளினி ரவி என்பவர் ஜோடி போட உள்ளார்.

mirnalini-ravi-cinemapettai

mirnalini-ravi-cinemapettai

இவர் ஏற்கனவே தெலுங்கில் பிரபல நடிகர் அதர்வா உடன் ஜோடி போட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமான மிருணாளினி ரவி தற்போது ஹீரோயினாகவும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

Continue Reading
To Top