Tamil Cinema News | சினிமா செய்திகள்
பழைய குருடி கதவ திறடி என மீண்டும் மிஷ்கினிடம் தஞ்சமடைந்த விஷால்.. எப்படியாச்சும் ஹிட் கொடுங்க என கெஞ்சல்!
தமிழ் சினிமாவில் சண்டை போடுவதற்கு என்றே அளவெடுத்து செய்த மாதிரி செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். பிரபல தயாரிப்பாளரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமிரு, சண்டக்கோழி போன்ற படங்கள் வெற்றி பெற ஓரளவுக்கு அறியப்படும் நாயகனாக வலம் வந்தார். ஆனால் சமீபகாலமாக விஷாலின் படங்கள் அனைத்துமே முதல் காட்சி கூட பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.
கடந்த சில வருடங்களில் அவர் நடித்த துப்பறிவாளன் படம் மட்டுமே வெற்றியை கொடுத்தது. துப்பறிவாளன் படத்தை மிஷ்கின் இயக்கி இருந்தார். வெற்றி கொடுத்த இயக்குனரிடம் மீண்டும் இரண்டாம் பாகத்தை எடுக்க சொல்லி கேட்டார் விஷால்.
கிட்டத்தட்ட 70 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் சம்பள விஷயத்தில் முட்டிக் கொண்டது. மிஷ்கினுக்கு யாரும் படம் கொடுக்க கூடாது என தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் நோட்டீஸ் விட்டார்.
ஆனால் அதுவே மிஷ்கினுக்கு லக்காக அமைந்துவிட்டது. தொடர்ந்து பல படங்களில் கமிட் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் விஷால் தன்னிடம் வந்து மீண்டும் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க கேட்டால் கண்டிப்பாக நான் இயக்கி தருவேன் என கூறியிருந்தார்.
அதன்படி வந்ததை விடக்கூடாது என மீண்டும் விஷால் மிஷ்கினிடம் அடிக்கடி பேசி வருகிறாராம். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் துப்பறிவாளன் 2 படத்தில் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார். பழைய சம்பளத்தையும் கொடுக்க ஓகே சொல்லிவிட்டாராம்.
முன்னதாக துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கப் போவதாக கூறியிருந்த விஷால், மிஸ்கின் ஸ்கிரிப்ட் புரியாததால் வேறுவழியின்றி அடைந்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிண்டல் அடிக்கின்றனர்.
