Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஷால் திருமணம் செய்ய போகும் பெண் இவர்தான்..
திருமணம் செய்ய போகும் விஷால்
விஷால் சமீப காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். நடிகர் சங்கத்தில் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். அதனால் இவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் சமீபகாலமாக வந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி விட்டனர். அதனால் விஷால் அவர்கள் அந்தப் பூட்டை திறக்க போய் பிரச்சனையில் சிக்கி பின்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனவும் மற்றும் அதற்கான காப்பி சான்றிதழ்கள் உள்ளதாகவும் உறுதியளித்தார். இதனை பொதுக்கூட்டத்தில் கூறுவதாகவும் கூறினார்.
நடிகர் சங்கத்தை கட்டி முடித்தவுடன் தன் திருமணத்தை செய்துகொள்வதாக அனைவரிடமும் தெரிவித்தார். தற்போது நடிகர் சங்கம் கட்டடம் முடியும் தருவாயில் உள்ளது. அதனால் அவரது வீட்டில் விஷாலுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகளான அனுஷா என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் நிச்சயதார்த்தம் ஆந்திராவில் நடைபெறவுள்ளதாக தகவல் கூறியுள்ளனர்.
