அதிரடி நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த விஷால் கடந்த சில வருடங்களாக வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். போதாக்குறைக்கு தனக்கு வெற்றி கொடுத்த இயக்குனர்களுடன் பஞ்சாயத்து வேறு.
விஷால் படங்கள் வெளியாகும்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் வெளியான பிறகு இந்தப் படத்துக்காக வெயிட் பண்னோம் என்கிற அளவுக்கு சுமாரான படங்களில் நடித்து வருகிறார். அதுவும் கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன், சக்ரா போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தனக்கு ஏற்கனவே வெற்றிப்படம் கொடுத்த மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்தின் போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தை பாதியிலேயே போட்டு விட்டு கிளம்பிவிட்டார். மீதியை நானே இயக்குகிறேன் என்ற பெயரில் சொதப்பி வைத்துள்ளாராம் விஷால்.
இதனால் அந்த படத்தை வெளியிட்டாலும் தோல்வி தான் என்பதை புரிந்துகொண்டு ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். இருந்தாலும் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஷால்.
இதன் காரணமாக 2012ம் ஆண்டு சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணியில் முதன் முதலாக உருவான மதகஜராஜா என்ற படம் உருவாகி பல நாட்களாக பெட்டியில் உறங்கி வருகிறது. இதனால் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டாலும் பரவாயில்லையென அந்த படத்தை தூசி தட்ட உள்ளாராம் விஷால்.

இதற்காக பெரிய ஓட்டி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். மதகஜராஜா படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த படமாவது விஷாலுக்கு கை கொடுக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.