Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொரோனாவுக்கு பிறகு கொடூரமாக மாறிய விஷால்.. அடக்கடவுளே! கண்ணுக்கு என்ன ஆச்சு?
தமிழ் சினிமாவில் அதிர்ஷ்டசாலி நடிகர் என்றால் அது விஷால் தான். செல்லமே எனும் முதல் படத்திலேயே பெரிய அளவு வெற்றியை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து திமிரு, சண்டக்கோழி என ஆக்சன் படங்களில் நடித்து கமர்ஷியல் நாயகனாக வலம் வந்தார். வெகு சீக்கிரமாக ஒரு நடிகரை கமர்ஷியல் ஹீரோவாக ஒத்துக்கொண்டது விஷாலை மட்டும்தான்.
விஷால் தனது சினிமா கேரியரில் அவ்வப்போது தோல்விப் படங்களையும் ஒரு சில வெற்றிப் படங்களையும் மாறி மாறி கொடுத்து வருகிறார். இதற்கிடையில் தான் போட்டி போட்ட முதல் நடிகர் சங்க தேர்தலில் வெற்றியைப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றியை பெற்று இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தலைவராக இருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பல புகைச்சல்களை ஏற்படுத்தியது.
சமீபத்தில் நடிகர் விஷாலுக்கும் அவரது தந்தைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இயற்கை வைத்தியத்தின் மூலம் அதிலிருந்து மீண்டுவிட்டதாக கூறியிருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஷாலின் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவரது கண்ணுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளதைப் போல் தெரிகிறது.
நம்ம ஊர் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் ஒன்றரைக் கண். கொரோனாவுக்கு பிறகு ஆளே கொஞ்சம் மாற்றம் அடைந்தது போல் தெரிகிறார்.

vishal-latest
